ஞாயிறு, 13 டிசம்பர், 2009

பால்தாக்கரே, காமடியனா? வில்லனா?

பால்தாக்கரே, காமடியனா? வில்லனா?


'இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமென்றால், வந்தேமாதரம் பாடலை ஏற்றுக் கொள்ள வேண்டும்; (இஸ்லாமியர்களை வெட்டு, குத்து, கொல்லு என்று கூறும் வன்முறைப் பாடல்களைக் கொண்டது வந்தே மாதரம்.) பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட ஒப்புக் கொள்ள வேண்டும்; இன்னும் பொது சிவில் சட்டம் அது இது' என்று பட்டியலை நீட்டி முழக்குகிறார் பால்தாக்கரே என்னும் ஓய்வு பெற்ற அரசியல் பயங்கரவாதி.

இந்த உத்தரவுகளையிட யாரிவர்?

இந்திய நாட்டின் சர்வாதிகாரியா?

இந்திய நாட்டின் தாதா ரவுடியா?

இல்லை, நம் தமிழ் நாட்டின் கோமாளிகள் சோ, சூனா சாமி போன்ற காமெடியனா?

அது என்ன சங்பரிவார் குஞ்சுகள் என்றாலே கோமாளித்தனமான ரவுடிகள்தானா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பதையே என்னவென்று தெரிந்து கொள்ளாத இவர்களெல்லாம் என்ன வகை அரசியல்வாதிகள்?

இந்திய அரசியல் சட்டத்தில் நியாயமாக இருக்க வேண்டிய... சேர்க்கப்பட வேண்டியவை இதோ...

1) இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டுவோர் தேசத் துரோகிகள்.

2) சக மனிதர்களை இழிவுபடுத்துகிற ஜாதிகளை 'இந்து மதத்திலி'ருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். ("இந்து மதம்" என்பதே வெள்ளைக்காரன் போட்ட அடையாளம்.)

3) உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூனூலை அகற்ற வேண்டும்

இந்த நியாயமான மனித நேயச் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள சிவ சேனா, சங்பரிவார் வகையறா முன் வர வேண்டும்.

இத்தகைய சமத்துவ மனித நேயச் சிந்தனைகள்தாம் வலிமையான இந்தியாவை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக